News March 28, 2025
திருச்சியில் 485 மாணவர்கள் பொது தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 21173 ஆகும். அதில் இன்று நடைபெற்ற தேர்வில் 20688 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் ஆண்களில் 323 பேர் பெண்களில் 162 பேர் என மொத்தம் 485 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
Similar News
News March 2, 2026
சந்திர கிரகணம் – ஸ்ரீரங்கம் கோயில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி நாளை மார்ச்.3-ம் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் 1 மணிக்கு மேல் மூலஸ்தானத்திலும், உப சன்னதிகளிலும் சேவையில்லை என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், சந்திர கிரகணத்தை ஒட்டி நம் பெருமாள் பிற்பகல் 3 மணிக்கு சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809), பொறியியல் பணிகள் காரணமாக வரும் மார்ச்.3, 5, 7, 10, 16, 21, 22 ஆகிய தேதிகளில், கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். எனவே பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


