News June 27, 2024

திருச்சியில் 30ம் தேதி தமிழ் மொழி பயிற்சி.!

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான தமிழ்மொழி பயிற்சி, நூல் விமர்சனம் மற்றும் ஓவிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது, வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறார்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்கும் சிறார்கள் குறிப்பேடு மற்றும் ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் எடுத்து வர வேண்டும். 

Similar News

News November 25, 2025

திருச்சி: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பைக்

image

துவரங்குறிச்சி அடுத்த இச்சடிபட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது டூவீலர் திடீரென தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 25, 2025

திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு!

image

திருச்சி மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 25, 2025

திருச்சியில் கோர விபத்து

image

திருச்சி வரகனேரியை சேர்ந்த ஷேக் அப்துல்லா, நிகேஷ் ஆகியோர் டூவீலரில் நேற்று தென்னூர் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் டூவீலரில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஷேக் அப்துல்லா பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காட்டூரைச் சேர்ந்த முகமது ஆசிக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!