News August 9, 2024
திருச்சியில் 12,655 மாணவர்கள் தேர்வு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி அட்டையை வழங்கினார். இந்த திட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 123 கல்லூரிகளைச் சேர்ந்த 12,655 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 22, 2025
திருச்சி: தப்பி ஓடிய கடத்தல் கும்பலுக்கு வலை வீச்சு

மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மணல் கடத்தல் கும்பல் போலீசாரை கண்டதும் வேனை நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளனர். அதனை தொடர்ந்து வேனை கைப்பற்றிய போலீசார் பூமி பாலன், கிஷோர், பால சமுத்திரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
News November 22, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை, அணியாப்பூர் அடுத்த வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 23ஆம் தேதி முதல் டிச.12ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, ஆடு மாடு மேய்ச்சலில் ஈடுபடவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
திருச்சி: கார் தலைக்கீழ் கவிழ்ந்து விபத்து

சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த வேல்முருகன் தனது நண்பர்களுடன் சபரிமலை சென்றுவிட்டு நேற்று மாலை மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி அருகே வந்த கொண்டிருந்தார். அப்போது மழையின் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


