News April 14, 2025
திருச்சியில் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பிளஸ் 2 படித்தவர்கள் <
Similar News
News December 9, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருச்சி அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். https://tiruchirappalli.nic.in என்ற தலைப்பில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம், ஆவூர் சாலை, மாத்தூர், திருச்சி என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
திருச்சி: டூவீலர் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முத்தரசநல்லூர் அருகே நேற்று (டிச.8) கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தும் வராததால், விபத்து ஏற்படுத்திய அதே காரில் அவர்களை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News December 9, 2025
நவல்பட்டு: விமான நிலையத்தில் விலங்குகள் பறிமுதல்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று (டிச.8) திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் 32 அல்பினோ சிகப்பு காது ஆமைகள், 3 அல்பினோ ரக்கூன்ஸ், 13 கிரீன் இகுவானா ஆகியவற்றை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து விலங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


