News April 8, 2025
திருச்சியில் வேலைவாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News September 15, 2025
திருச்சி: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 15, 2025
திருச்சி: தந்தையை தாக்கிய மகன் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கீழ பொய்கைப்பட்டியை சேர்ந்தவர் கோபால் (56). இவரது மகன் சிவா. இருவருக்குமிடையே கடந்த செப்.09 அன்று பண பரிவர்த்தனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவா தனது தந்தையை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மணப்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இதையடுத்து புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சிவா மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
News September 15, 2025
திருச்சி: TNPSC குரூப் 2, 2ஏ மாதிரி தேர்வு அறிவிப்பு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ போட்டித் தேர்வுகளுக்கான, மாதிரித்தேர்வு இன்று (செப்.,15) காலை 10 மணி முதல் பகல் 1:30 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வில் முழு பாட பகுதிகளிலிருந்தும் வினாக்கள் இடம்பெறும். இம்மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை என திருச்சி மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.