News August 6, 2024
திருச்சியில் ரயில் சேவை மாற்றம்

திருவாரூர்-காரைக்கால் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சியிலிருந்து காலை 6.50 மற்றும் 8.35 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வரை செல்லும் டெமு ரயில்கள் இன்று முதல் 31ம் தேதி வரை, திருச்சியிலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News November 27, 2025
திருச்சி: 6 நாட்களுக்கு தடை விதிப்பு

வையம்பட்டி அடுத்த வீரமலைபாளையம் குண்டு சுடும் பயிற்சி தளத்தில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தலைமையிடமாக கொண்ட இந்தோ-திபெத் ராணுவ வீரர்கள் வரும் நவ.,27-ம் தேதி முதல் டிச.,2-ம் தேதி வரை குண்டு சுடும் பயிற்சி செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் வீரமலைபாளையம் பகுதியில் நாளை முதல் 6 நாட்களுக்கு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
திருச்சி: லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி பகுதியில் நள்ளிரவில் ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் காயங்களுடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 27, 2025
திருச்சி: தடுப்பு கட்டையில் மோதி சிதறிய கார்!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த சரத்பாபு என்பவர் கேரளா மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக கல்லுப்பட்டி அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த மூவரும் பலத்த காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


