News April 29, 2025
திருச்சியில் மே.1ஆம் தேதி கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே.1ஆம் தேதி தொழிலாளர் தினம் அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம், இணைய வழி பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். உங்க பகுதி மக்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
Similar News
News October 24, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஓவியப் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நூலகத்தில் வரும் அக்.,26-ம் தேதி காலை 10:30 – 12:30 மணி வரை சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான “பேசும் சித்திரம்” என்ற தலைப்பில் “ஓவியப்பயிற்சி” நடைபெற உள்ளது. வாசகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
திருச்சி: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு திருச்சி மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (0431-2460125) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 24, 2025
திருச்சி: ஆளை விழுங்கிய கடன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் எலக்ட்ரீசியன் கடை நடத்தி வரும் ஜோசப் ராஜ் என்பவர் கடன் பிரச்சனை காரணமாக நேதாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


