News August 10, 2024
திருச்சியில் மீண்டும் முகநூல் மோதல்

திருச்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் நேருவின் செயல்பாடுகளால், லால்குடி தொகுதி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அதிர்ச்சியில் உள்ளார். எம்எல்ஏவின் நேற்றைய முகநூல் பதிவில், லால்குடி சட்டமன்ற தொகுதி இ.வெல்லனூரில் காலை “மக்களுடன் முதல்வர் திட்டத்தை” நான் துவக்கி வைத்தேன். மதியம் 1 மணிக்கு அமைச்சர் நேரு பட்டா வழங்குகிறார். ஒரே நிகழ்ச்சி இரண்டு முறை நடந்துள்ளது. இதுதான் திருச்சியில் நடைமுறை என்று பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்0-4, கட்டணமில்லா மாதிரித்தேர்வு வரும் 8-ம் தேதி காலை 10:00 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முழு பாடப்பகுதிகளில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். இந்த தேர்வில், மதிப்பெண் குறைந்தவர்களுக்கு அதனை அதிகரிக்க அறிவுரைகள், வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நூலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
திருச்சி: ரூ.18 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஹவுராவில் இருந்து வந்த ரயிலில் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த 4 பைகளில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 36 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போதைப்பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 7, 2025
திருச்சி: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

திருச்சி சமயபுரம் சௌமியா நகரில் தஞ்சாவூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் டான்போஸ்கோ குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் சுடுதண்ணீர் வைத்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி டான்போஸ்கோ பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


