News March 27, 2024
திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி.!

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.
Similar News
News October 17, 2025
திருச்சி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க !
News October 17, 2025
திருச்சி: குறைந்த கட்டணத்தில் தையல் பயிற்சி

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்டணத்தில் ஒரு மாத காலம் தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி தொடங்க உள்ள இந்த பயிற்சியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் பல்கலைக்கழகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 98427 73237 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
திருச்சியில் 23 பேர் கைது!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய பென்சன் திட்டம் (சி.பி.எஸ்) ஒழிப்பு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய 23 பேரை திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் கைது செய்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.