News January 23, 2025
திருச்சியில் பொது விநியோகத் திட்ட கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, தொட்டியம், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, மருங்காபுரி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 6, 2025
திருச்சி: இன்று குடிநீர் வராது!

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் மின்பராமரிப்பு பணி இன்று (டிச.6) நடைபெற உள்ளது. இதனால் திருச்சி மத்திய சிறைச்சாலை, காஜாமலை, ரங்கா நகர், சுப்பிரமணியநகர், கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, அம்மா மண்டபம், மேலூர், தேவிபள்ளி விறகுபேட்டை, சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
திருச்சி: மரம் முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி

தொட்டியம், அரங்கூரில் நேற்று புளியமரம் விழுந்ததில் நிர்மலா என்பவர் உயிரிழந்தார். நிர்மலா மரத்தடியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில், சாப்பாடு வாங்குவதற்கு நடந்து செல்லும் போது புளியமரம் சாய்ந்து நிர்மலா மீது விழுந்தது. இதில், மயக்கமடைந்து கீழே விழுந்தவரை அவரது கணவர் மகாமுனி அரசு மருத்துவமனை கொண்டு சேர்த்தார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News December 5, 2025
திருச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

திருச்சி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!


