News August 8, 2024
திருச்சியில் பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதும், அந்த நாளில் விருது வழங்குவதும் வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்தநாளில் பெரியார் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
மணப்பாறை: பொதுமக்கள் நடமாட தடை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், ஜன.5 முதல் 7 ஆம் தேதி வரையிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
திருச்சி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 2019ம் ஆண்டு மணப்பாறை ஆண்டவர் கோவில் பகுதியில் ஜெகதீஷ் பாண்டியன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டடார். இவ்வழக்கில் கைதான வேடசந்தூரைச் சேர்ந்த அரவிந்த்-க்கு ஆயுள் தண்டனையும், பேகம்பூரைச் சேர்ந்த முத்துவேல், திருச்சியைச் சேர்ந்த பாதுஷா, ஆனந்த், தேனியைச் சேர்ந்த மதன்குமார் உள்ளிட்டோருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News December 20, 2025
திருச்சி: மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

முசிறி எல்லையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்ராஜ் (39). தொழிலாளியான இவர் சடையப்ப நகரி; உள்ள ஓர் வீட்டில் கண்ணாடி மாட்டுவதற்காக சென்றுள்ளார். வேலை முடிந்ததும் அங்கிருந்த மாமரம் ஒன்றில், மணிகண்டன் மாங்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


