News December 6, 2024
திருச்சியில் பிக்கப் வேன் மோதி ஒருவர் பலி: 3 பேர் காயம்

திருச்சி மாத்தூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (56) மற்றும் இவர்கள் உறவினர்கள் 3 பேரோடு ஆட்டோவில் புதுக்கோட்டை நோக்கி சென்ற பொழுது, சிட்கோ அருகில் காய்கறிகள் ஏற்றி வந்த பொலிரோ பிக் அப் வேன் மோதியதில் சந்திரசேகர் பலியானார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
திருச்சி: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
திருச்சி – சென்னை ரயில் நேரம் மாற்றம்

திருச்சி – சென்னை சோழன் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி – சென்னை எக்மோர் சோழன் விரைவு ரயிலானது நாளை (டிச.17) ஒரு நாள் மட்டும், ஒரு மணி நேரம் தாமதமாக நண்பகல் 12 மணிக்கு புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
திருச்சி: 4 நாட்களுக்கு ரயில் ரத்து!

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி – காரைக்கால் டெமு ரயில் வரும் 24, 26, 28, 31 ஆகிய தேதிகளில், காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.


