News April 3, 2025
திருச்சியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

அரங்கூர், ஏலூர்பட்டி, சீனிவாசநல்லூர், கொளக்குடி, அப்பணநல்லூர், மணமேடு, மகேந்திரமங்கலம் போன்ற பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கி இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News November 23, 2025
திருச்சி: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

திருச்சி மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News November 23, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப் 4 மாதிரித் தேர்வு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 24-ம் தேதி காலை 10 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது. ஓஎம்ஆர் தாளில் விடையளிக்கும் இத்தேர்வில், குரூப் 4 தேர்வுக்கான முழு பாடப்பகுதியில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். தேர்வின் இறுதியில் அதிக மதிப்பெண் பெற அறிவுரை, வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலுவலகம் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.


