News July 15, 2024
திருச்சியில் பறவைகள் பூங்கா ஆகஸ்ட் 15-ம் தேதி திறப்பு?

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே காவிரிக் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி மாநகரின் பறவைகள் பூங்கா மற்றும் பறவைக் கூடத்தின் 85 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் பறவைகள் பூங்காவை நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் எம்.பிரதீப்குமார் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்த பறவைகள் பூங்கா 60,000 சதுர அடி மற்றும் 70 அடி உயரம் கொண்ட தளம் கொண்டது.
Similar News
News July 11, 2025
புத்தாநத்தம்: மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளர் பலி

புத்தாநத்தம் கடைவீதியில் உள்ள மின்மாற்றியில் இன்று மின்பாதை ஆய்வாளர் ஜேம்ஸ் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 11, 2025
திருச்சி: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <
News July 11, 2025
திருச்சி: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்