News August 14, 2024
திருச்சியில் துரை வைகோ கண்டனம்

திருச்சி எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது ஒரு சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காக தான். இது கண்டிக்கத்தக்க விஷயம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி இருப்பதாக பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
Similar News
News November 27, 2025
திருச்சி மாவட்டத்தில் தேடுதல் வேட்டை – எஸ்.பி

திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில், ராம்ஜி நகர் பகுதியில் ரூ.34,500 மதிப்புள்ள புகையிலை, திருவெறும்பூரில் ரூ.40,000 மதிப்புள்ள புகையிலை, துவரங்குறிச்சி பகுதியில் ரூ.30,000 மதிப்புள்ள புகையிலை, துவாக்குடி பகுதியில் ரூ.5570 மதிப்புள்ள புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி எஸ்.பி செல்வநகரத்தினம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News November 27, 2025
திருச்சி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நிகழும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இத்தகைய சூழலில் திருச்சி மாவட்ட பெண்கள் எந்த ஒரு வகையான குடும்ப வன்முறையை எதிர்கொண்டாலும், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை மறக்கமால் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
திருச்சி: 6 நாட்களுக்கு தடை விதிப்பு

வையம்பட்டி அடுத்த வீரமலைபாளையம் குண்டு சுடும் பயிற்சி தளத்தில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தலைமையிடமாக கொண்ட இந்தோ-திபெத் ராணுவ வீரர்கள் வரும் நவ.,27-ம் தேதி முதல் டிச.,2-ம் தேதி வரை குண்டு சுடும் பயிற்சி செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் வீரமலைபாளையம் பகுதியில் நாளை முதல் 6 நாட்களுக்கு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


