News March 30, 2024
திருச்சியில் தானியங்கி ஆய்வகம் தொடக்கம்,

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் தானியங்கி தொழில்நுட்ப தொழில்துறை ஆய்வகம் நேற்று தொடங்கப்பட்டது. இந்திரா கணேசன் கல்வி குழும தலைவர் கணேசன் தலைமையிலும் செயலாளர் ராஜசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர், சென்னை பல்கலை கழக துணை வேந்தர் ராஜ் திறந்து வைத்தார். தானியங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Similar News
News November 25, 2025
திருச்சி: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த சுற்றுலா தலமான புளியஞ்சோலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆற்றில் இறங்கி குளிப்பது, நீர்நிலைக்கு அருகில் செல்பி எடுப்பது, ஆற்றங்கரைக்கு அருகே செல்வது, வனப் பகுதிகளில் நடமாடுவது போன்ற செயல்களுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.
News November 25, 2025
திருச்சி: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

சோமரசம்பேட்டையை அடுத்த கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் டேனியல் ஸ்டீபன் (32). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்த இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். டேனியல் ஸ்டீபன் கடந்த சில நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 25, 2025
திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


