News May 7, 2024
திருச்சியில் ஜிஎஸ்டி சிறப்பு பயிலரங்கம்

திருச்சி தமிழ்நாடு பார்மா டிஸ்ட்ரிபியூஷன் அசோசியேஷன் சார்பில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஜிஎஸ்டி பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.மாநிலத் தலைவர் சிதம்பரம் தலைமையில் பொதுச் செயலாளர் ராஜன் வரவேற்க அமைப்புச் செயலாளர் சோமசுந்தரம் துணைத் தலைவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.சேலத்தைச் சேர்ந்த மூத்த வரி ஆலோசகர் ஆடிட்டர் ராஜ பாலு கலந்துகொண்டு ஜிஎஸ்டி பற்றி பேசினார்.
Similar News
News April 21, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில், திருச்சி – காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி பல்வேறு பணிகள் காரணமாக ஏப்ரல்.22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த வண்டி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 21, 2025
10 ஆவது படித்திருந்தால் போதும், உடனே அப்ளை பண்ணுங்க..

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th,12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் அனைவருக்கும் பகிரவும்
News April 21, 2025
உறையூர் குடிநீர் விவகாரம் – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஏப்.21) அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, “திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழப்பு என்பது ஆதாரமற்றது. உயிரிழந்தவர்களின் குடும்ப மருத்துவரே சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். மேலும், சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.