News August 26, 2024
திருச்சியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார். இதற்காக அந்தந்த பேருந்து நிலையங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 31, 2025
திருச்சி: மின்சார குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாநகரப் பகுதிகளில் செப்டம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் வரும் செப்.12-ம் தேதியும், திருச்சி நகரிய கோட்டத்தில் செப்.16-ம் தேதியும், திருச்சி கிழக்கு கோட்டத்தில் செப்.19-ம் தேதியும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மின் மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News August 30, 2025
திருச்சி: விவசாயிகள் மாநில குழு கூட்டத்திற்கு அழைப்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள மாணிக்கம் இல்லத்தில் நாளை (ஆக.31) காலை நடைபெற உள்ளது. இதில் மாநில தலைவர் குணசேகரன், பொது செயலாளர் மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் சிவசூரியன் தெரிவித்துள்ளார்.
News August 30, 2025
திருச்சி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருச்சி மக்களே..! வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <