News March 27, 2024
திருச்சியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்கள் திருச்சிக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்க்காவல் படையினரின் வாத்திய குழு இசையுடன் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. திருச்சி சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே நடந்த இந்த அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
Similar News
News December 5, 2025
திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் பல்வேறு மோசடிகளில் சிக்கும் நிலையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாட்டு வேலை மோசடிகளில் சிக்காமல் இருக்க வேலைவாய்ப்பு அல்லது முகவர்களின் உரிமத்தை emigrate.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்க கூறியுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கூறியுள்ளது.

News December 4, 2025
திருச்சி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல்துறைக்கு நடப்பு ஆண்டுக்கு (2025-26) தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்க தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து மூடி முத்திரை இடப்பட்ட விலை மதிப்பீடுகள் (டெண்டர்) வரும் 10-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் விரிவான விவரங்களுக்கு மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.