News July 19, 2024
திருச்சியில் உற்சாக வரவேற்பு

திருச்சி காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் திருநாவுக்கரசுக்கு திருச்சியில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Similar News
News April 27, 2025
திருச்சியில் SBI வங்கியில் வேலை

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<
News April 27, 2025
மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா ஏப்.30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து மே.1ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் மே.9ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க..
News April 27, 2025
ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

துறையூர் அருகே பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த பாலகுமார் மகன் தர்ஷன் (13). நேற்று பெற்றோருடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது, நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க தர்ஷன் இறங்கியுள்ளார். அப்போது மூழ்கத் தொடங்கிய அவரை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.