News October 17, 2024
திருச்சியில் உதவி எண்கள் அறிவிப்பு

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவ மழையின் காரணமாக, பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது தகவல் ஏதும் தெரிவிக்க நினைத்தாலோ காவல் கட்டுப்பாட்டு அறை அலுவலக எண் 0431-2418070 அல்லது காவல் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் அப் 9384039205 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News April 29, 2025
திருச்சியில் மே.1ஆம் தேதி கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே.1ஆம் தேதி தொழிலாளர் தினம் அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம், இணைய வழி பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். உங்க பகுதி மக்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News April 29, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு (76820) ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி-தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். காரைக்கால்-திருச்சி (76819) காரைக்கால்-தஞ்சாவூர் இடையே ரத்து செய்யப்படும்; தஞ்சாவூர்-திருச்சி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
திருச்சியில் வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். வரி, வரியில்லா இனங்கள் சம்பந்தமான அனைத்து வரிகளை https://tnurbanepay.tn.gov.in என ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார்.