News April 22, 2025
திருக்கோஷ்டியூர் மஞ்சுவிரட்டில் வயதான மூதாட்டி

திருக்கோஷ்ட்டியூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று (21-04-2025), திருக்கோஷ்டியூரில் நடந்த மஞ்சுவிட்டில் இளையாத்தங்குடியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன் சொந்த காளையை தானே போட்டியில் அவிழ்த்துவிட கொண்டு வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Similar News
News April 22, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 25.04.25 அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
News April 22, 2025
சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

▶️வட்டாட்சியர், சிவகங்கை -9445000650
▶️வட்டாட்சியர்,மானாமதுரை – 9445000651
▶️வட்டாட்சியர்,இளையான்குடி – 9445000652
▶️வட்டாட்சியர், திருப்புவனம் -9788531396
▶️வட்டாட்சியர், காளையார்கோவில் -9843358548
▶️வட்டாட்சியர், தேவகோட்டை -9445000649
▶️வட்டாட்சியர், காரைக்குடி -9445000648
▶️வட்டாட்சியர் திருப்பத்தூர் -9445000647
▶️வட்டாட்சியர், சிங்கம்புணரி -9994373175
*பிறரும் பயன்பெற ஷேர் பண்ணுங்க
News April 22, 2025
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சம்பவ இடத்திலேயே பலி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள செல்லப்பநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்போஸ் என்ற விவசாயி தனது டிராக்டரில் திருப்புவனம் சென்றுவிட்டு தனது கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கால்வாய் அருகே எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.