News March 29, 2025
திருக்கோவிலூர்: 130 கோடியில் தடுப்பணை புதுப்பிப்பு

விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட திருக்கோவிலூர் தடுப்பணை மறுசீரமைப்புக்கு தமிழக அரசு 130 கோடி ஒதுக்கி உள்ளது. அதனை அடுத்து இன்று மார்ச் 29 தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள தடுப்பணையை பார்வையிட்டனர். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் வட்டாட்சியர் குமரவேலன் உட்பட பலர் இருந்தனர்.
Similar News
News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு <
News April 3, 2025
விழுப்புரம் சுற்றுவட்டாரங்களில் மழை

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. மரக்காணம், செஞ்சி, தீவனூர், நெடி, மோழியனூர், வண்டிமேடு, வி.மருதூர், விரட்டிக்குப்பம், சாலமேடு, ராஜாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
News April 2, 2025
பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உடையாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் பட்டா மாற்ற ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.தனியார் விடுதியில் வைத்து லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.