News January 12, 2025
திருக்கோவிலூர் அருகே விவசாயி தற்கொலை

திருக்கோவிலூர் அருகே உள்ள பெரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (60), விவசாயியான இவர் சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தி.மலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக வீரசோழபுரம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 27.ம் தேதி அன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் SI-க்கே கொலை மிரட்டல்..!

கள்ளக்குறிச்சி: திருப்பாலபந்தல் காவல் நிலைய எஸ்.ஐ வேல்முருகன், நேற்று (டிச.8) அருதங்குடி புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மாரிமுத்து என்பவர், எஸ்.ஐ-யை பார்த்து ‘என் வண்டியை ஏன் மறிக்கிறீர்கள்?’ எனக் கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த வழக்கில் இன்று (டிச.8) மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.