News August 14, 2024
திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பூமாரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சாலையின் அருகே உள்ள புளிய மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 25, 2025
கள்ளக்குறிச்சி மக்களின் எதிர்பார்ப்பு…

சின்னசேலம், பகண்டைகூட்ரோடு, கல்வராயன்மலை ஆகிய 3 பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்திற்கான அனைத்து உபகரண பொருட்கள் இருந்தும், பணி துவங்கப்படாமல் உள்ளது. இதனால், தினமும் 100கும் மேற்பட்டோர் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்வதற்காக ,நீண்ட வரிசையில் நிற்கின்றனர். எனவே சுற்றியுள்ள அலுவலகத்தில் ஆதார் சேவை மையங்கள் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News October 25, 2025
கள்ளக்குறிச்சி: மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

உளுந்தூர்பேட்டை அஜுஸ் நகரில் வசித்து வந்த காந்திமதி கடந்த 2 வருடங்களாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். அக்-23 உடல்நிலை மிகவும் மோசமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<


