News April 23, 2025

திருக்கோவிலூரில் மணம் முடித்த அங்கவை சங்கவை

image

திரைப்பட நகைச்சுவை காட்சியில் அங்கவை சங்கவை என்ற பெயர்களை பார்த்திருப்பீர்கள். நகைச்சுவை தண்டி இந்த பெயர்கள் தமிழோடும் கள்ளக்குறிச்சியோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் மறைவுக்கு பின் அவரது மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் கபிலர் அழைத்து வந்து திருக்கோவிலூரில் ஒருவருக்கு மணம் முடித்து வைத்து பின் கபிலர் குன்றில் உயிர் நீத்தார். தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க

Similar News

News December 14, 2025

கள்ளக்குறிச்சி: துப்பாக்கி வைத்திருந்தவருக்கு வலைவீச்சு!

image

கள்ளக்குறிச்சி: விரியூரில் ஒருவர் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில், உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் நேற்று (டிச.13) அறிவு என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு நாட்டுக்குப்பாக்கி மற்றும் சல்பர், பால்ரஸ், உப்பு கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய அறிவை போலீசார் தேடி வருகின்றனர்.

News December 14, 2025

கள்ளக்குறிச்சி: சொந்த ஊர் திரும்பியவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

கள்ளக்குறிச்சி: ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (32), சிங்கப்பூரில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் ஊருக்கு வந்த நிலையில், நேற்று தனது பைக்கில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுள்ளார். அப்போது, சாலையோர எச்சரிக்கை பலகை மீது மோதியதில் படுகாயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 14, 2025

கள்ளக்குறிச்சி: சிறுமியை நூதன முறையில் ஏமாற்றி 3 பவுன் நகை பறிப்பு!

image

கள்ளக்குறிச்சி: கரடி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (35), தனது மனைவியுடன் நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். மகள் கீர்த்தனா (12) மட்டும் தனியாக இருந்த போது, வந்த மர்மநபர் அம்மா கடன் தொகையை பீரோவில் வைத்துள்ளார், எடுத்து கொடு என கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, பீரோ சாவியை அவரிடமே கொடுத்த நிலையில், 3 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!