News August 10, 2024
திருக்குறள் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா 15,000 மற்றும் சான்றிதழ், தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 30ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
மயிலாடுதுறையில் மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை அருகே உளுத்துகுப்பை சாவடி தோப்பு தெருவை சேர்ந்தவர் சூர்யா திருவிடைமருதூர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் தூக்கு போட்டு உயிரிழந்தார் மயிலாடுதுறை போலீசார் உடலை கை பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News August 11, 2025
மயிலாடுதுறை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 33 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <
News August 11, 2025
மயிலாடுதுறையில் பலரும் அறிந்திடாத கடற்கரை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் திருமுல்லைவாசலில் உள்ள கூழையார் கடற்கரை ஒன்றாகும். இங்கு நதியும், கடலும் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிப்பதால் பார்பதற்கு மிக அழகானதாக தோன்றுகின்றது. பலரும் அறிந்திடாத ஈந்த கடற்கரையில் நிலவும் அமைதியான சூழலுக்காகவே இக்கடற்கரையை பற்றி அறிந்தவர்கள் அடிக்கடி வருகின்றனர். அனைவருக்கும் ஷேர் செய்து நம்ம ஊரு கடற்கரையை தெரியப்படுத்துங்கள்