News December 31, 2024

திருக்குறள் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

image

தருமபுரி மாவட்ட நூலகத்தில் ஐயன் திருவள்ளுவரின் 133அடி உயர திருவுருவச் சிலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் நடைபெற்றது. இதில் மூக்கனூர் அரசு பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி மீனாட்சி முதலிடமும், ஜீவா நகர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு ஹாசினி இரண்டாம் இடமும், வேலனூர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர் யோகேஷ் மூன்றாம் இடம் பிடித்தனர்.

Similar News

News December 5, 2025

தருமபுரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News December 5, 2025

தருமபுரி: முஸ்லிம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சாமியார்

image

பொம்மிடி நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரஷியா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த ஆண்கள் எழுந்து வேறு இடம் சென்றனர். தொடர்ந்து பெண்கள் ஒன்றாக சேர்ந்து சேலைகளை சுற்றி தடுப்பு ஏற்படுத்தினர். அப்போது, காவி உடை அணிந்த சாமியார் போன்ற தோற்றத்தில் இருந்த பெண் ஒருவர் வந்து அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

News December 5, 2025

தருமபுரியில் 30,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

image

தருமபுரி – பென்னாகரம் பிரதான சாலையில் நேற்று சந்தேகத்துக்கிடமான வகையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதை போலீஸாா் சோதனை செய்ததில், 600 முட்டைகளில் 30,000 கிலோ (30 டன்) ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரி மற்றும் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசியை கடத்திச்செல்ல முயன்ற தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த ரா.ஆனந்தகுமாரை கைது செய்தனா்.

error: Content is protected !!