News March 5, 2025
திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

கன்னியாகுமரி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில், பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குமரியில் இருந்து இம்மாதம் 12 மற்றும் 14ஆம் தேதிகளில் புறப்படும் ரயில் சென்னை கடற்கரை, பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.என்று தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. SHARE IT.
Similar News
News October 16, 2025
குமரி: உரிமம் இன்றி பலகாரம் விற்றால் ரூ.10 லட்சம் FINE!

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பண்டிகைகால காரம் இனிப்பு விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நாககோவிலில் நேற்று நடந்தது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில், உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி காரம், இனிப்பு வகை விற்றால் ரூ.20 லட்சம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனைக்கு வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
News October 16, 2025
குமரியில் 800க்கும் மேலான காலியிடங்கள்! கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. வரும் 17.10.2025 (வெள்ளி) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார். இதில் 10 நிறுவனங்கள் பங்கேற்று 800 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. SHARE
News October 16, 2025
குமரி – செங்கல்பட்டு தீபாவளி சிறப்பு ரயில் விவரம் இதோ…

தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு: இன்று (அக். 16, வியாழக்கிழமை), அக்.18ம் தேதி இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் எண்.06133 மறுநாள் மதியம் 1.25 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். மறுமார்க்கமாக கன்னியாகுமரி – செங்கல்பட்டு சிறப்பு ரயில் (எண்.06134) 17ம் தேதி மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.