News April 21, 2025
திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை

திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த ரயிலில் பெரிதும் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலின் சேவையை தினசரி இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Similar News
News November 20, 2025
குமரி: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News November 20, 2025
குமரி: கூட்டுப் பட்டாவை மாற்ற எளிய வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT.
News November 20, 2025
குமரி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.


