News May 7, 2025
திருக்காரவாசல்: நாளை கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம்

மே தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், நாளை திருக்காரவாசல் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொள்ள உள்ளார். கிராம சபை கூட்டங்களில் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் மற்றும் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
Similar News
News October 14, 2025
திருவாரூர்: இளைஞர்களுக்கு உதவித் தொகை!

திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, +2, பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் ஆகியுள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். விளமலில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
திருவாரூர்: 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு!

முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் (20) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அதே பகுதியில் உள்ள முருகன் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கற்பமாக்கி, பின்னர் அக்கருவை கலைத்துள்ளனர் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை மகளிர் போலீசார், சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 14, 2025
திருவாரூர்: பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!

முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு முனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நளாயினி (48). இவர் தனது ஸ்கூட்டியில் நேற்று கடைதெருவில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, வழியாக முனங்காடு நோக்கி சென்ற தனியார் மினி பேருந்து மோதி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த முத்துப்பேட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.