News April 14, 2024
திருக்கண்ணமங்கையில் சித்திரை திருவிழா தொடக்கம்

பாடல் பெற்ற 108 வைணவ ஆலயங்களில் ஒன்றான திருவாரூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ அபிஷேகவல்லி தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று முதல் தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 18 ஆம் தேதி கருடசேவை திருவிழாவும் 23 ஆம் தேதி திருத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 11, 2025
நெல் ஜெயராமனுக்கு சிலை; முதல்வர் அறிவிப்பு!

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் எஸ் எஸ் நகரில் இன்று (ஜூலை 10) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக முதலவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு, திருத்துறைப்பூண்டியில் ஆள் உயர சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
News July 11, 2025
திருவாரூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு 10 மணி முதல் நாளை(ஜூலை 11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
News July 10, 2025
திருவாரூக்கு புதிய திட்டங்கள்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டல் வருகை தந்த தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டர். அதில், ஜூபிலி மார்க்கெட் பகுதியில் ரூ.11 கோடியில் வணிக வளாகம், வண்டம்பாளையம் ஊராட்சியில் ரூ.56 கோடியில் மாவட்ட மாதிரி பள்ளி, மன்னார்குடியில் ரூ.18 கோடியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் ரூ.43 கோடியில் ஆறுகள் வாய்க்கால்கள் புனரமைப்பு, பூந்தோட்டத்தில் புறவழிச்சாலை மற்றும் நெல் ஜெயராமன் சிலை வைக்கப்படுமென அறிவித்தார்.