News February 17, 2025

திரிபுரா மாநில ஆளுநருக்கு கலெக்டர் வரவேற்பு

image

திரிபுரா மாநில ஆளுநர் ஸ்ரீ இந்திரசேன ரெட்டி நல்லு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (பிப்.17) வருகை புரிந்துள்ளார். ஆளுநர் ஸ்ரீ இந்திரசேன ரெட்டி நல்லுவை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இவரது வருகையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News July 10, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை-10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News July 10, 2025

ராமநாதபுரத்தில் நேற்று 574 பேர் கைது

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தையொட்டி 7 இடங்களில் நடைபெற்ற மறியலில் 185 பெண்கள் உட்பட 574 பேர் கைது செய்யப்பட்டனர். 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியு இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. ராமநாதபுரம், பரமக்குடி, சிக்கல், திருவாடானை, சாயல்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

News July 10, 2025

ராமநாதபுரம்: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மதுரையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!