News October 23, 2024

திராவிட நாட்டை கண்டுபிடித்தால் 1000 பொற்காசுகள்

image

மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராஜ்குமார் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் இந்தியாவில் இந்தியனாகவும், தமிழகத்தில் தமிழனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு திராவிட நாடு எதற்கு?, மக்களே ஓட்டு வங்கி அரசியலுக்காக இல்லாமல் உணர்வில் இந்தியனாகவும் இனத்தில் தமிழனாகவும் வாழ்வோம் என்றும், திராவிட நாட்டை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஆயிரம் பொற்காசுகள் என சர்ச்சை போஸ்டர் அடித்துள்ளார்.

Similar News

News January 2, 2026

மதுரை: ஆட்டோ டிரைவர் கொடூர கொலையில்.. புதிய தகவல்!

image

பெருங்­குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீஸ்­வ­ரன்(25) நேற்று முன்தினம் இரவு 5 பேரால் வெட்டி கொல்லப்பட்டார். அவனியா­புரம் போலீசார் விசா­ரணை நடத்தியதில், பெருங்குடி திருமுருகன்( 32), வலையங்குளம் அரு­ணாச்­ச­லம்(32 ), சௌராஷ்­டிர காலனி கார்த்­திக்(28), சக்­தி­வேல்(23) தண்­யா­யு­தபாணி(27) ஆகிய 5 பேர் இக்கொலையை செய்­தது தெரி­ந்தது. முன்விரோ­தம் காரணமாக கொலை செய்­தது தெரி­யவந்துள்ளது.

News January 1, 2026

மதுரை: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

image

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை<> கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News January 1, 2026

இன்று முதல் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம்

image

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் இன்று (புத்தாண்டு) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ரயில் இனி தினந்தோறும் அரைமணி நேரம் முன்னதாகவே 1.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னதாக புறப்படும் ரயில் மதுரையை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.

error: Content is protected !!