News March 28, 2024
திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

ஈரோடு 2024 மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஈரோடு திண்டல் பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 3, 2026
ஈரோடு: 10th போதும் அரசு வேலை APPLY NOW

ஈரோடு மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 173 பணிகள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு சம்பளமாக மாதம் ₹19.900 முதல் ₹78,800 வரை வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18-50. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16 ஆகும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <
News January 3, 2026
ஈரோடு: ஈமு நிறுவன சொத்துக்கள் ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட சில ஈமு கோழி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது அந்நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் ஏலத்திற்கு டி ஆர் ஓ தலைமை வகிக்கிறார். ஏல நிபந்தனைகளை மாவட்ட இணையதள முகவரி www.erode.tn.nic.in ல் அறியலாம்.
News January 3, 2026
ஈரோடு மக்களே மிக முக்கிய அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் இன்று ஜனவரி 3-ஆம் தேதி, நாளை ஜனவரி 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் திருத்தம், மாற்றம் போன்ற பணிகளுக்காக மக்கள் இந்த இரு நாள்களில் முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இதை உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!


