News March 27, 2024

திமுக வேட்பாளருக்கு ஆதரவு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு ஜவகர் இல்லம் காங்கிரஸ் அலுவலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில், இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Similar News

News November 15, 2025

ஈரோடு மாவட்ட இரவு காவலர் ரோந்து பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100 க்கும், சைபர் கிரைம் எண்-1930 க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும், போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News November 14, 2025

ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளிக்கு விருது!

image

2024-25 ஆம் ஆண்டிற்கான ஈரோடு மாவட்டத்தின் சிறந்த 3 தொடக்கப்பள்ளிகளில் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளியும் தேர்வாகி உள்ளது. அதற்கான விருது மற்றும் கேடயம் வழங்கும் விழா காரைக்குடியில் இன்று (நவ.14) நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியையிடம் விருது மற்றும் கேடயங்களை வழங்கினார்.

News November 14, 2025

குழந்தை கடத்தல் விவகாரம் – எஸ்.பி பாராட்டு!

image

ஈரோடு பவானி லட்சுமி நகரில் பெற்றோருடன் வசித்த 2 வயது குழந்தை, கடந்த அக்டோபர்-16 அன்று நாமக்கல் தம்பதியால் கடத்தப்பட்டது. 25 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பிறகு குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட சித்தோடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்கு எஸ்.பி சுஜாதா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!