News August 16, 2024
திமுக நன்றாக செயல்படுகிறது என்று அர்த்தம்: ஆர்.எஸ்.பாரதி

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்குபெற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, திமுகவை கண்டித்து அதிமுக தீர்மானம் கொண்டு வருகிறது என்றால், திமுக நன்றாக செயல்படுவதாக அர்த்தம் என கூறினார்.
Similar News
News December 4, 2025
சென்னை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 4, 2025
ஏவிஎம் சரவணன் மறைவு : முதல்வர் அஞ்சலி

பிரபல தயாரிப்பாளர் ஏ வி எம் சரவணன் இன்று காலை உயிரிழந்ததை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு, தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
News December 4, 2025
சென்னையை எட்டி பார்க்கும் சூரியன்!

சென்னையில் 5 நாட்களுக்குப்பின், மீண்டும் சூரிய ஒளி ஆங்காங்கே படர்ந்து வருகிறது. சென்னையின் சில பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரும் வடிய தொடங்கிவிட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலு இழந்ததால் இரவு முதலே மழை குறைய தொடங்கிவிட்டது. இன்று மாலை வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேரு இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.


