News January 24, 2025
திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

வருகின்ற 25/01/25 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திமுக கட்சியின் இளைஞரணி சார்பாக நாமக்கல் பூங்கா சாலையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் தலைமை தாங்குகிறார். நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 4, 2026
நாமக்கல்லில் ஜன. 07-ல் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தில் ஜனவரி மாதம் மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 7-ந் காலை 11 மணிக்கும் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்கண்ட நாளில் முகாமில் கலந்து கொண்டு, தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.
News January 3, 2026
நாமக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
நாமக்கல்லில் குடிபோதையில் விபரீதம்!

நாமக்கல்: வெண்ணந்தூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரோஜா. இவரின் மகன் சண்முகம் (46). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தனித்தனியே வசித்து வருகின்றனர். சண்முகம் தாய் சரோஜா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மனமுடைந்த சண்முகம் மதுபோதையில் விட்டத்தில் நைலான் கயிற்றை மாட்டி கடப்பாக்கல்லில் ஏறி நின்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


