News February 23, 2025
திமுகவினர் அத்துமீறல்: பொள்ளாச்சியில் மீண்டும் இந்தி!

பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை இன்று (பிப்.23) காலை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கருப்பு மை வைத்து அழித்த நிலையில் சில மணி நேரங்களில் ரயில் நிலைய அதிகாரிகள் மீண்டும் இந்தியில் எழுதினர். திமுகவின் கோவை தெற்கு சட்ட திட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் உட்பட ஐந்து பேரு மீது பொள்ளாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர்.
Similar News
News July 6, 2025
குழந்தை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

கோவையில் கார்ட்டூன் தொடர்களுக்கு அடிமையாகி, அதில் வரும் கேரக்டர்கள் போல் தங்களை மாற்றி நடந்து கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 2வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை அனுமதிக்க கூடாது. பாடம் சார்ந்ததை மட்டும் சிறிது நேரம் பார்க்க அனுமதிக்கலாம். இவ்விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றனர். (SHARE)
News July 6, 2025
கவியருவி இன்று முதல் திறப்பு

ஆனைமலை அருகே கவியருவி, சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் அங்கு செல்லவும், தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் கடந்த ஒரு மாதமாக கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், தொடர்ந்து கவி அருவி மூடப்பட்டிருந்தது. தற்பொழுது கவியருவிக்கு நீர்வரத்து குறைந்ததால், இன்று முதல் கவியருவி திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News July 5, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.