News March 20, 2024

திண்டுக்கல்: 76 இடங்களில் அனுமதி!

image

மக்களவை தோதலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 76 இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், 254 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களை தவிா்த்து, பிற இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினா் தெரிவித்தனா்.

Similar News

News August 31, 2025

தட்டச்சு தேர்வில் மாணவர்கள் பங்கேற்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்.வி.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரி, புனித வளனார் பாலிடெக்னிக், எஸ்.பி.எம்.பாலிடெக்னிக்,பழனியாண்டவர் பாலிடெக்னிக் உள்ளிட்ட 5 மையங்களில் தட்டச்சு தேர்வுகள் இன்று நடந்தது. இதில் வளனார் பாலிடெக்னிக், ஏ.பி.சி. ரமணா தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தட்டச்சு தேர்வு நடந்தது. 5 மையங்களில் நடந்த தேர்வில் 4 ஆயிரத்து 531 மாணவர்கள் பங்கேற்றனர்.

News August 31, 2025

திண்டுக்கல்:ரூ.35,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff, Loaders, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு போதுமானது. சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..!

News August 31, 2025

BREAKING: திண்டுக்கல்லில் பயங்கர விபத்து!

image

திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலை பெட்ரோல் பங்க் அருகே இன்று அதிகாலையில் கரூரில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வேனும் – பெரியகுளத்தில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 வேன்களின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!