News March 3, 2025

திண்டுக்கல்: +2 தேர்வு எழுதும் 21,817 பேர்

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 10,361 மாணவர்கள், 11,451 மாணவிகள் என மொத்தம் 21,817 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 86 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தனித்தேர்வர்களாக 273 பேர் எழுதுகின்றனர்.

Similar News

News July 7, 2025

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

image

திண்டுக்கல் வாழைக்காய்பட்டி வாசிமலை நகர் பகுதியில், ஆதிமூலம் மற்றும் அவரது மனைவி சுமதி வீட்டை பூட்டி விட்டு, மகளின் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை சென்ற போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்து, பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகையை திருடியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 6, 2025

திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று, (ஜூலை 6) இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். காவல் துறை அட்டவணையை வெளியிட்டு, அவசர உதவிக்கு அட்டவணையில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News July 6, 2025

பூமிக்கு அடியில் முருகன்: திண்டுக்கல் கோயில் சிறப்பு!

image

ரெட்டியார்சத்திரம், ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோயில் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் பூமிக்கு அடியில், செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்பு முருகன் என பெயர். இங்கே, கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழங்கப்படுகிறது. இதை அணிந்தால் குழந்தை பேறு, தொழிலில் முன்னேற்றம், வீடு, நிலம், சொத்துகள் கிட்டும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!