News March 3, 2025

திண்டுக்கல்: +2 தேர்வு எழுதும் 21,817 பேர்

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 10,361 மாணவர்கள், 11,451 மாணவிகள் என மொத்தம் 21,817 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 86 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தனித்தேர்வர்களாக 273 பேர் எழுதுகின்றனர்.

Similar News

News December 25, 2025

திண்டுக்கல் மக்களே உடனே SAVE பண்ணுங்க!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கான புகார் எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ரெட்டியார்சத்திரம் 0451- 2400195, குஜிலியம்பாறை 04551-293606, நிலக்கோட்டை 04543-294699, வடமதுரை 04551-2911823, ஆத்தூர் 0451-2911823, திண்டுக்கல் 0451-2999603, பழனி 04545-242180, கொடைக்கானல் 04542-243188 என ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, SHARE பண்ணுங்க!

News December 25, 2025

திண்டுக்கல்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

image

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சில்வார்பட்டி பகுதியில் பிரபு (38) என்பவர், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஈஸ்வரியை (35) சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இந்நிலையில் கொலையாளி பிரபுவை, சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

திண்டுக்கல்லில் லோன் ஆப் மோசடி! உஷார்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, போலியான லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ வழிகளைத் தவிர பிற ஆப்களின் மூலம் கடன் பெறுவது ஆபத்தானது என்றும், இவ்வகை மோசடிகள் தனிப்பட்ட விவரங்களைப் பெற்று மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கினால் 1930 சைபர் எண் அல்லது www.cybercrime.gov.in புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!