News April 21, 2025

திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு, விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறைகளின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டு மானிய திட்டங்கள், விவசாய கடன் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். 

Similar News

News October 19, 2025

திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

திண்டுக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News October 19, 2025

திண்டுக்கல்லில் ‘கிடுகிடு’ உயர்வு!

image

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை உள்ளிட்ட பல பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ₹ 500 முதல் ₹ 800 வரை விற்பனையான மல்லிகைப்பூவின் விலை,நேற்று கிலோ ₹ 1,800 முதல் ₹ 2,200 வரையிலும், முல்லை ₹ 1,300, காக்கரட்டான் ₹1,300, ஜாதிப்பூ ₹ 1,000 விற்பனை செய்யப்பட்டது. உங்கள் பகுதியில் என்ன விலை மக்களே கமெண்ட் பண்ணுங்க!

News October 19, 2025

திண்டுக்கல்: இலவச சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!