News October 10, 2024
திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்றக்கூடத்தில் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மேலும், விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம்.
Similar News
News December 8, 2025
17 வயது சிறுமியை திருமணம் செய்த விவசாயி கைது!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 17 வயது சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில் 45 வயதான விவசாயி தோப்படியான் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தோப்படியானை கைது செய்தனர்.
News December 8, 2025
திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய கொள்ளையன்!

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில், கடந்த மாதம் 23ஆம் தேதி, கருப்புச்சாமி என்பவரின் வீட்டில் முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, 18 பவுன் நகை மற்றும் ரூ.38,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்தது.இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட கள்ளிமந்தயம் போலீசார்,கொள்ளையர்களில் ஒருவரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான்கான் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
News December 8, 2025
திண்டுக்கல் மக்களே.. ஏமாற வேண்டாம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தல், டெலிகிராம் வேலைவாய்ப்பு குழுக்கள் மூலம் “டாஸ்க் செய்து அதிகம் சம்பாதிக்கலாம்” என வரும் தகவல்கள் அனைத்தும் மோசடிகளாகும். தெரியாத நபர்களின் லிங்குகள் அல்லது வேலை அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகள் குறித்து 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தின் மூலம் உடனே புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.


