News April 1, 2025
திண்டுக்கல் வழியாக ரயிலில் தொடரும் கஞ்சா கடத்தல்

மேற்கு வங்காளத்திலிருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி வரும் புரலியா எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 50 கிலோ குட்கா கடத்தியதாக 2 பேர், வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். புரலியா எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் சோதனைகளை பலப்படுத்த காவல்துறை முடிவெடுத்துள்ளது.
Similar News
News December 3, 2025
திண்டுக்கல் மக்களே உஷார்: பல லட்சம் மோசடி!

வத்தலக்குண்டு வீருவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 52. இவர் தன் மகன்கள் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தரும்படி ரூ.36.10 லட்சம் பணத்தை கரூர் குமார், நிலக்கோட்டை மாரிமுத்துவிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற அவர்கள் தலை மறைவாகினர். இதுகுறித்து மாரிமுத்து, குமார், உட்பட 4 பேர் மற்றும் இதில் தொடர்புடைய கரூரைச் சேர்ந்த கவுரிசங்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
News December 3, 2025
திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.