News April 16, 2025

திண்டுக்கல் முதியவர் துடிதுடித்து பலி !

image

பழனியை அடுத்த ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). விவசாயியான இவா், நேற்று(ஏப்.15) வயலுக்குச் சென்று விட்டு, ராமநாதன் நகா் பிரதானச் சாலையில் சைக்கிளில் வந்தார்.அப்போது, அங்கு வந்த லாரி மோதியதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பழனி அடிவாரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 3, 2025

திண்டுக்கல் அருகே முளைத்த அதிசய காளான்!

image

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள பூசாரிபட்டி கிராமத்தில் ஒரு விவசாயத் தோட்டத்தில் சுமார் 13 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான காளான் முளைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வளவு பிரம்மாண்டமான காளான் முளைத்தது இதுவே முதல்முறை என்பதால், பூசாரிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து இந்தக் காளானை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

News November 3, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 2) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், பழனி,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News November 3, 2025

திண்டுக்கல் மாவட்ட போலீசார் சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வீட்டுகள், கடைகள், பொதுத்தளங்களில் சிசிடிவி கேமிரா பொருத்துவது குறித்தும் “சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற செய்தியையும் பகிர்ந்து வருகின்றனர். குற்றங்களைத் தடுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் போலீசார் வலியுறுத்துகின்றனர்.

error: Content is protected !!