News April 13, 2024
திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், திண்டுக்கல், சிவகங்கை, ராம்நாடு, நாமக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், சேலம், கரூர், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் நெல்லை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 28, 2025
திண்டுக்கல்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்க்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை பழனி நகராட்சியில் தேவாங்கர் மண்டபம், ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி முத்துநாயக்கன்பட்டி, சாணார்பட்டி வட்டாரத்தில் சமுதாய கூடம் அதிகாரிபட்டி மற்றும் வடமதுரை வட்டாரத்தில் ஊர்மந்தை கொல்லப்பட்டி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
News October 28, 2025
திண்டுக்கல்: கேன் தண்ணீர் பயன்படுத்துவர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
News October 28, 2025
திண்டுக்கல்: India Post-ல் வேலை! நாளை கடைசி

திண்டுக்கல் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<


