News August 14, 2024
திண்டுக்கல் மாநகராட்சி செயற்கை நீருற்று சுத்தம்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக நுழைவு பகுதியில் செயற்கை நீருற்று உள்ளது. இது விழாக்காலங்களில் மட்டும் பயன்பாட்டிலிருக்கும். மற்ற நேரங்களில் கவனிக்கப்படாமல் கிடக்கும். இதனால் இங்கு மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும் அதிகரித்தது. இந்நிலையில், கமிஷனர் ரவிச்சந்திரன் செயற்கை நீருற்றை ஆய்வு செய்து, உடனே சுத்தப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி சுகாதார பணியாளர்கள் செயற்கை நீருற்றை நேற்று சுத்தம் செய்தனர்.
Similar News
News September 17, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல்,ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News September 16, 2025
திண்டுக்கல்: கை ரேகை வேலை செய்யலையா?

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, திண்டுக்கல் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம்.
News September 16, 2025
திண்டுக்கல்: UPSC நிறுவனத்தில் சூப்பர் வேலை!

திண்டுக்கல் மக்களே.., மத்திய அரசின் ‘UPSC’ நிறுவனத்தில் ‘Accounts Officer’ பணிக்கு 35 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.47,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.2ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க <