News August 2, 2024
திண்டுக்கல் மாநகராட்சி நிதி கையாடல் ஒருவர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் ரூபாய் 4.66- கோடி ரூபாய் கையாடல் செய்ததை தொடர்ந்து இளநிலை உதவியாளா்கள் சரவணன், சதீஷ், கண்காணிப்பாளர் சாந்தி ஆகிய மூவரை மாநகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் இன்று மாநகராட்சி நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Similar News
News December 10, 2025
வேடசந்தூர் அருகே சரமாரியாக குத்திக் கொலை!

வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த செந்தில் (27) என்பவரை, வேடசந்தூர் லட்சுமணன்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (24) என்பவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்த முத்துக்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது . பணம் எடுத்த பின் உடனே விலகாமல் சுற்றுப்புறத்தை கவனிக்க வேண்டும் என்றும், உதவி செய்வதாக நடிக்கும் மர்ம நபர்களை நம்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏமாற்று சம்பவங்களைத் தடுக்க, தெரியாதவர்களிடம் கார்டு அல்லது பின் எண்ணை பகிர வேண்டாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


