News August 14, 2024

திண்டுக்கல்: மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கு விருது

image

திண்டுக்கல் பகுதியில் மாடித் தோட்டம் அமைத்த 100 பேருக்கு சுதந்திர தினவிழாவில், விருது வழங்கி கெளரவிக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 48 வாா்டுகளிலும் மொத்தம் 100 போ் தெரிவு செய்யப்பட்டுள்ளனா். இதன் மூலம், மாடித் தோட்டம் அமைத்து மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே உரமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 7, 2025

நத்தம் அருகே விபத்து! தாய், மகன் பலி…

image

மதுரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அழகுமீனாள் (50) மற்றும் அவரது மகன் சரவணபாண்டி (24) நத்தம் அருகே பண்ணுவார்பட்டியில் உள்ள தாயின் வீட்டில் இருந்து திரும்பிய போது, பூதகுடி அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில், அழகுமீனாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சரவணபாண்டி, மருத்துவமனையில் உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

திண்டுக்கல்: நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து

image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே (நவம்பர் 6) இன்று நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் முதியவரின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது, அருகில் இருந்த பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

News November 7, 2025

திண்டுக்கல்லில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதிய ஜூனியர் மற்றும் சீனியர் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவுகளை https://tndtegteonline.in/GTEOnline/GTEResultAUG2025.php என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!